வெள்ளனூரில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி
வெள்ளனூரில் தென்னிந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அன்னவாசல்:
கபடி போட்டி:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வெள்ளனூரில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி ஒவ்ெவாரு ஆண்டும் தென்னிந்திய அளவில் கபடி போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான கபடிபோட்டி கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி நேற்று மதியம் முடிந்தது. 3 நாட்களாக நடந்த கபடி போட்டியில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, பெங்களூரு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடந்தது.
பரிசு
இதில் முதல் பரிசை பெங்களூரு கஸ்டம்ஸ் அணியும், 2-வது பரிசை கேரளா ஜெ.கே. ஸ்போர்ட்ஸ் அணியும், 3-வது பரிசை தமிழ்நாடு சென்னை ஐ.சி.எப். அணியும், 4-வது பரிசை தமிழ்நாடு சென்னை கஸ்டம்ஸ் அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு, கோப்பைகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. கபடி போட்டியை காண புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் வந்திருந்து கண்டுகளித்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வெள்ளனூர் போலீசார் செய்திருந்தனர்.