அரசு டவுன் பஸ் கண்டக்டருக்கு திடீர் மயக்கம்
அரசு டவுன் பஸ் கண்டக்டருக்கு திடீர் மயக்கம்;
கீரமங்கலம்:
புதுக்கோட்டையில் இருந்து கொத்தமங்கலம் வாடிமாநகர் கடைவீதிக்கு டவுன் பஸ் ஒன்று வந்தது. பஸ்சில் மணப்பாறையை சேர்ந்த பழனியப்பன் கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ் மீண்டும் புதுக்கோட்டை செல்ல பஸ்சை திருப்பும் போது, கீழே இறங்கி கண்டக்டர் விசில் ஊதிக் கொண்டிருந்தவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் சத்தம் போட்டு பஸ்சை பின்பக்கம் வருவதை நிறுத்தச் சொல்லி மயங்கிக் கிடந்த கண்டக்டரை மீட்டு தண்ணீர் தெளித்து முதலுதவி செய்துள்ளனர். பின்னர் அவரை கொத்தமங்கலம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கண்டக்டர் சிகிச்சையில் இருந்ததால் பயணிகள் ஏற்றாமல் பஸ் ஆலங்குடி பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.