கொடுத்த கடனை திரும்பி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்த கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை- புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு

கொடுத்த கடனை திரும்பி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்த கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2021-02-09 06:04 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் இம்னாம்பட்டியை சேர்ந்தவர் வீரம்மாள். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது33) கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் வீரம்மாள் கடையில் கடனுக்கு பொருட்கள் வாங்கியுள்ளார். 

இந்நிலையில் வீரம்மாள் கடனுக்கு கொடுத்த பொருட்களுக்கான பணத்தை கேட்டபோது முருகேசன் தகாத வார்த்தைகளில் பேசியும், அவரை காலால் உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வீரம்மாள் கணேஷ்நகர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் முருகேசனை கைது செய்து புதுக்கோட்டை கூடுதல் மகிளா கோர்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜியாவுர் ரகுமான் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்ட குற்றத்திற்காக 3 ஆண்டு சிறையும், பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதற்காக 2 ஆண்டு சிறையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமாக ரூ.10 ஆயிரமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும் விதித்தார். மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்