சமயபுரம் அருகே அ.ம.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்

சமயபுரம் சுங்கச்சாவடி அருகே அ.ம.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-09 02:39 GMT
சமயபுரம்,

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா விடுதலையானதை தொடர்ந்து நேற்று பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அவருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக சசிகலாவின் ஆதரவாளர்களும், அ.ம.மு.க. தொண்டர்களும் ஏராளமானோர் கார்களில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர்.


இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த கார்களை விராலிமலை சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே அ.ம.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது சமயபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்த திருச்சி சரக போலீஸ் டிஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செந்தில்குமார், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த கட்சியினர் தொடர்ந்து கார்களில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்