நங்கவள்ளி அருகே, வேலைவாங்கி தருவதாக 14 பேரிடம் ரூ.14.80 லட்சம் மோசடி

நங்கவள்ளி அருகே குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 14 இளைஞர்களிடம் ரூ.14 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-;

Update: 2021-02-09 02:30 GMT
மேச்சேரி,

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே வீரக்கல் பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 23). பெயிண்டர் ஆக பணிபுரிந்து வருகிறார்.  
இவரிடம் நங்கவள்ளி அருகே கோனூர் கனூர் கரடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ராஜப்பன் என்பவர், குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிவதாக பொய்யான தகவல் கூறி, அங்கு வேலை காலியாக உள்ளதாகவும், வேலைவாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய சக்திவேல், மற்றும் நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், மேச்சேரி பகுதிகளைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், இளங்கோவன், மணிகண்டன், பவித்ரன், விவேகானந்தன், அன்பழகன் உள்பட 14 இளைஞர்களிடம் மொத்தம் ரூ.14 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை ராஜப்பன் பெற்றுக் கொண்டு வேலையும் வாங்கிக் கொடுக்காமல் இருந்தார். பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதில் நடவடிக்கை எடுக்குமாறும் போலீசில் சக்திவேல் புகார் அளித்தார். இதன் பேரில் நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜப்பனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்