விருதுநகர்,
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த மீனா உள்பட 10 பெண்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து தங்கள் பகுதியில் உள்ள பாதையை தனிநபர் ஒருவர் அடைத்து விட்டதால் நடவடிக்கை கோரி சிவகாசி வருவாய்த்துறையினரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.