ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-02-09 01:01 GMT
பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி, ஊதியக்குழுவின் நிலுவைத்தொகை, தொகுப்பூதிய மதிப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகநாததுரை வரவேற்று பேசினார். 
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் முத்துமுருகன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் தங்கமணி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் லாரன்ஸ், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சந்தானகிருஷ்ணன், தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் பூப்பாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

முடிவில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்