வேப்பூா் அருகே விவசாயியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

வேப்பூா் அருகே விவசாயியை கத்தியால் குத்திய அண்ணனை போலீசாா் கைது செய்தனா்.;

Update: 2021-02-08 21:13 GMT
வேப்பூர்:

வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தை சேர்ந்தவர், தங்கராசு (55). விவசாயி. இவரது அண்ணன் குருநாதன் (60). இந்த நிலையில் பூர்விக சொந்தை பிரித்து தருமாறு தங்கராசு தனது அண்ணன் குருநாதனிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில்  தங்கராசு வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த குருநாதன் நீ உயிரோடு இருந்தால் தானே சொத்தில் பங்கு கேட்பாய் என கேட்டு கத்தியால் தங்கராசுவை குத்தியதாக தெரிகிறது. 

இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தங்கராசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திகணேஷ் வழக்குப்பதிவு செய்து குருநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்