குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-08 21:12 GMT
அச்சன்புதூர்:

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் மலம்பாட்டை தெருவை சேர்ந்த  வேல்சாமி மகன் கோட்டூர் சாமி (வயது 36). இவர் மீது செங்கோட்டை, கடையநல்லூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த மாதம் சொக்கம்பட்டியை சேர்ந்த பூசைத்துரை என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கடையநல்லூர் போலீசார் கோட்டூர்சாமியை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரைத்ததன்பேரில் கோட்டூர்சாமியை கடையநல்லூர் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகலை பாளையங்கோட்டை சிறையில் கோட்டூர்சாமியிடம் போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்