அம்பை வாகைபதியில் தை பெருந்திருவிழா தேரோட்டம்
அம்பை வாகைபதியில் தை பெருந்திருவிழா தேரோட்டம் நடந்தது.
அம்பை:
அம்ைப அருகே உள்ள வாகைகுளம் வாகைபதியில் ஸ்ரீ மன் நாராயண சுவாமி கோவிலில் தைப்பெருந் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் அனுமன், கருடன், பல்லக்கு, தொட்டில், நாகம் போன்ற வாகனங்களில் எழுந்தருளினார். 8-ம் திருநாளன்று அய்யா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். 10-ம் திருநாளன்று இந்திர வாகனத்தில் எழுந்தருளி முக்கிய நிகழ்வாக மதியம் முத்திரி கிணற்றில் இருந்து ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சந்தன குடம், பால்குடம் எடுத்து அங்கபிரதட்சணம் செய்தனர். 11-ம் திருநாளான நேற்று மாலையில் செண்டை மேளம் முழங்க அரகர கோஷத்துடன் சிறுவர், சிறுமிகளின் கோலாட்டத்துடன் தேரோட்டம் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சப்பர பவனியாக காளை வாகனத்தில் அமர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை வாகைபதி அய்யாவழி அன்பு கொடி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.