கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
கிணற்றுக்கு குளிக்கச்சென்ற வாலிபர், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
மங்களமேடு:
மங்களமேட்டை அடுத்த பெருமத்தூர் கிராமத்தில் மணி என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்நிலையில் ஆத்தூர் வட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் செல்வம்(வயது 35). இவர் பெருமத்தூரில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர், மணிக்கு சொந்தமான கிணற்றில் குளிக்க சென்றார். கிணற்றில் குளிக்க குதித்த அவர், தண்ணீரில் மூழ்கினார். இது குறித்த தகவலின்பேரில் வேப்பூர் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து, கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தேடி செல்வத்தை பிணமாக மீட்டனர். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.