பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகள் திறப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன.

Update: 2021-02-08 20:42 GMT
பெரம்பலூர்:
தமிழகத்தில் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி முதுகலை அறிவியல், தொழில்நுட்பப் பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கும், இளநிலை கலை மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல், மருத்துவ படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கும் கடந்த டிசம்பர் 7-ந்தேதியும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 மாதங்களை கடந்து தமிழக அரசின் உத்தரவின்படி நேற்று முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், பாலிடெக்னிக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். அவர்களின் உடல் வெப்பநிலை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, அவர்கள் கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் வகுப்பறையில் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவ-மாணவிகள் அமர வைக்கப்பட்டு, பேராசியர்கள் பாடங்களை கற்பித்தனர். மேலும் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வகுப்பறைகளில் வைக்கப்பட்டிருந்தது. 10 மாதங்களுக்கு பிறகு கல்லூரிக்கு திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் தங்களது நண்பர்களை நேரில் சந்தித்து மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்