பாதயாத்திரை சென்ற பக்தர், மொபட் மோதி சாவு

பாதயாத்திரை சென்ற பக்தர் மீது மொபட் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-02-08 20:24 GMT
மங்களமேடு:
திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் சோழநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 50). இவர் நேற்று முன்தினம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சுமார் 120 பேருடன் பாதயாத்திரையாக சென்றார். சென்னை-திருச்சி சாலையில் மங்களமேடு அருகே உள்ள சின்னாறை அடுத்த ஒரு தனியார் மண்டபம் அருகே வந்தபோது, பின்னால் திட்டக்குடி வட்டம் டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த பிரபு(35) ஓட்டி வந்த மொபட் சுப்பிரமணி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்தார். இதுகுறித்து சுப்பிரமணியின் மனைவி அஞ்சலி கொடுத்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்