சிறுமியை பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-02-08 19:30 GMT
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 37). இவர் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக, போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்குப்பதிந்து, அசோக்குமாரை கைது செய்து அரியலூர் கிளை சிறையில் அடைத்தார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரையின்பேரில் அசோக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். இதற்கான உத்தரவின் நகலை அசோக்குமாரிடம் வழங்கிய போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்