உளுந்தூர்பேட்டையில் பந்தய புறாக்கள்
உளுந்தூர்பேட்டையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு பந்தய புறாக்கள் பறந்து சென்றன
உளுந்தூர்பேட்டை
திருச்சி ராக்சிட்டி கிளப் சார்பில் புறா பந்தயம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இதில் திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான புறாக்களை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்தனர். உளுந்தூர்பேட்டையில் இருந்து நேற்று முன்தினம் காலை 8.20 மணிக்கு போட்டி தொடங்கியது. அப்போது கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட புறாக்கள் ஒரே நேரத்தில் திறந்துவிடப்பட்டன. அவை தங்களது இருப்பிடத்தை நோக்கி வானில் சிறகடித்துப் பறந்தன.
இது குறித்து போட்டியாளர்கள் கூறும்போது, பறக்க விடும் இடத்திலிருந்து 350 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு தங்களது இருப்பிடத்தை விரைவாக வந்துசேரும் புறாவின் காலில் கட்டப்பட்டுள்ள குறியீட்டு எண்ணை அதன் உரிமையாளர் செல்போனில் படம்பிடித்து எங்களுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு முதலில் அனுப்பப்படும் நபரின் புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றனர்.