கடலூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கடலூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
புதுச்சேரி,
புதுவையில் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதை அதிகாரிகள் அவ்வப்போது அகற்றினாலும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று தாசில்தார் ராஜேஷ்கண்ணா தலைமையில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கடலூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். சாலையோரங்களில் இருந்த சிறு கடைகள், தள்ளுவண்டிகள் மற்றும் விளம்பர தட்டிகள் போன்றவற்றையும் அள்ளி எடுத்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
அதிகாரிகளின் இந்த செயல்பாட்டிற்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.