திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய செயல் அலுவலராக விஷ்ணுசந்திரன் பொறுப்பேற்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய செயல் அலுவலராக விஷ்ணு சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.;

Update:2021-02-08 22:04 IST
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய செயல் அலுவலராக விஷ்ணு சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். 
பொறுப்பேற்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையராக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் இணை ஆணையர் கல்யாணி கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இதனால் கோவில் புதிய செயல் அலுவலராக விஷ்ணுசந்திரனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
 
இதனை தொடர்ந்து புதிய செயல் அலுவலராக விஷ்ணுசந்திரன்  பொறுப்பேற்றார். அவரிடம் கல்யாணி பொறுப்புகளை ஒப்படைந்தார். முன்னதாக விஷ்ணுசந்திரன் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்தார். 
   
பேட்டி
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தூத்துக்குடியில் கூடுதல் கலெக்டராக பணியாற்றினேன். பல்வேறு துறைகளில் பணியாற்றி இருந்தாலும் இந்த துறை எனக்கு புதியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலராக பணியாற்றும் வாய்ப்பை சுப்பிரமணிய சுவாமியே தந்ததாக மகிழ்ச்சி அடைகிறேன். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றார். 
  
நிகழ்ச்சியில், தக்கார் பிரதிநிதியும் ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணியம் ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியம், சீதாலட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்