வெளியூர் வாகனங்கள் அனுமதித்த முதல் நாளிலேயேகல்லட்டி மலைப்பாதையில் பாறை மீது கார் மோதியது
கல்லட்டி மலைப்பாதையில் பாறை மீது கார் மோதியது;
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து வெளிமாநில, வெளிமாவட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மசினகுடி வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து நேற்று முதல் இந்த பாதையில் வளியூர் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்கிடையே வெளியூர் வாகனங்களை அனுமதித்த முதல் நாளிலேயே கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஊட்டியை சுற்றி பார்த்து விட்டு கல்லட்டி வழியாக திரும்பினர்.
அப்போது திடீரென சாலையோர பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. காருக்குள் இருந்த 4 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.
இதுகுறித்து புதுமந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.