அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது

அனுமதியின்றி மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-02-08 16:29 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சடையன்வலசை ஓடை பகுதியில் அந்த வழியாக டிராக்டரை மடக்கி நிறுத்த முயன்றபோது நிற்காமல் ஓட்டிச்சென்றனர். போலீசார் விரட்டிச் சென்று மடக்கியபோது அதில் அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்றது தெரிந்தது. இதனை தொடர்ந்து உச்சிப்புளி துத்திவலசை வெள்ளரிஓடை பகுதியை சேர்ந்த ரமேஷ்(வயது 38) என்பவரை கைது செய்தனர். டிராக்டரை மணலுடன் கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடிய சடையன்வலசையை சேர்ந்த நம்புராஜன் என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்