பள்ளிகொண்டாவில் அ.ம.மு.க.வினர் சாலை மறியல்

பள்ளிகொண்டாவில் சசிகலாவுடன் வந்த ஆதரவாளர்களின் கார்களை தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-08 16:25 GMT
அணைக்கட்டு

பள்ளிகொண்டாவில் சசிகலாவுடன் வந்த ஆதரவாளர்களின் கார்களை தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கார்கள் தடுத்து நிறுத்தம்

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் சென்ற சசிகலா நேற்று இரவு 7.40 மணிக்கு பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தார். சுங்கச்சாவடியை கடந்ததும் பொதுமக்கள் பார்ப்பதற்காக சசிகலா சென்ற கார் ஓரமாக நிறுத்தப்பட்டது. அப்போது அவரது ஆதரவாளர்கள் சசிகலா காரின் மீது பூக்களைத் தூவியும், அவரை கையெடுத்துக் கும்பிட்டும் வரவேற்றனர். பின்னர் சசிகலாவின் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 

இந்த நிலையில் சசிகலா சென்ற காரின் பின்னால் அணிவகுத்து வந்த அவரது ஆதரவாளர்களின் கார்களை செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் சசிகலாவின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த ஆதரவாளர்கள் டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து சசிகலாவின் ஆதரவாளர்களின் கார்களை ஒன்றன்பின் ஒன்றாக செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

---
Image1 File Name : 2682391.jpg
----
Reporter : K. DHIWAKAR  Location : Vellore - ANAICUT

மேலும் செய்திகள்