வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு.
ஆவூர்,
அண்ணா சலவைத் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் விராலிமலையில் உள்ள மாநில அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் எம்.ஜி.ஆர். சின்னப்பா தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் தோைகமலை பழனியப்பன், புதுக்கோட்டை வடிவேல், திருச்சி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் விராலிமலை ஆனந்தன் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது. 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது. கடந்த காலங்களைப் போலவே வருகிற சட்டமன்ற தேர்தலில் சலவைத் தொழிலாளர் சமுதாய பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க பொருளாளர் கன்னியப்பன் நன்றி கூறினார். கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.