மானாமதுரை ஊராட்சி ஒன்றிய கூட்டம்

மானாமதுரை ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது.

Update: 2021-02-08 03:10 GMT
மானாமதுரை, 

மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்்சி அதிகாரிகள் சுந்தரமகாலிங்கம், அழகுமீனாள் முன்னிலை வகித்தனர். மேலாளர் விஜயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடைேய நடந்த விவாதங்கள் வருமாறு: 
அண்ணாத்துரை(தி.மு.க.): விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வட்டார வளர்ச்்சி அதிகாரி சுந்தரமகாலிங்கம்: தீர்மானம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 
ருக்மணி(அ.தி.மு.க.): ராஜகம்பீரத்திலிருந்து கள்ளர்வலசை செல்லும் பாதையில் உள்ள மயானத்திற்கு ரோடு வசதி செய்து கொடுக்க வேண்டும். 
வட்டார வளர்ச்்சி அதிகாரி அழகுமீனாள்: ரோடு போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். முருகேசன் (இ.கம்யூ.): கிராமப்பகுதிகளில் சேதமடைந்த அனைத்து பயிர்களையும் அதிகாரிகள் பார்வையிட்டு இன்சூரன்ஸ் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சுந்தரமகாலிங்கம்: அந்தந்த துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.  கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பஞ்சவர்ணம், மஞ்சுகுமாரி, ஜெயலெட்சுமி, சசிகுமார், மலைச்சாமிநாகவள்ளி, பாண்டியம்மாள், சுந்தரவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்