பென்னங்கூர் கிராமத்தில் எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பென்னங்கூர் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பென்னங்கூர் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடு பிடி வீரர்கள் விரட்டி சென்று காளைகளின் கொம்புகளில் கட்டி வைத்திருந்த பரிசு பொருட்களை பறித்து சென்றனர். இந்த விழாவை சுற்றுவட்டார கிராம மக்கள் வந்து கண்டு ரசித்தனர்.