புத்துணர்வு முகாமிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை அனுப்பி வைப்பு

புத்துணர்வு முகாமிற்கு ஆண்டாள் கோவில் யானை லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2021-02-08 01:24 GMT
நல்வாழ்வு முகாம் 
தமிழக அரசு சார்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் இன்று நடைபெற உள்ளது. இந்த முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து யாைனகள் கலந்து கொள்கின்றன. 
இந்த முகாமில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு சத்தான உணவுகளும், பல்வேறு வகையான பயிற்சிகளும் அளி்க்கப்படுகின்றன. 

ஆண்டாள் கோவில் யானை 
அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெய மால்ய தா யானை நேற்று அதிகாலை கோவிலில் இருந்து லாரி மூலம் புறப்பட்டு சென்றது. 

முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்