சிவகாசி அருகே கிராமப்புற மாணவர்களுக்கு தடகள போட்டி
கிராமப்புற மாணவர்களுக்கு தடகள போட்டி
சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில் கிராமப்புற மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் பங்கேற்றனர். போட்டியை சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவர் டாக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஸ்போக்கோ விளையாட்டு அமைப்பினர் செய்திருந்தனர்.