சேலத்தில் மெக்கானிக் தற்கொலை

சேலத்தில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-07 23:14 GMT
மெக்கானிக்
சேலம் சூரமங்கலம் கென்னடி நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 35), மெக்கானிக். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த மாணிக்கம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்