தேவநேயப் பாவாணரின் பிறந்த நாள் விழா

மதுரையில் தேவநேயப் பாவாணரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-02-07 22:59 GMT
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 119-வது பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மதுரை ஆவின் அருகே உள்ள மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்தில் நடந்தது. அங்குள்ள தேவநேயப் பாவாணரின் சிலைக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன், மாணிக்கம் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நினைவு மண்டபத்தில் தேவநேயப் பாவாணரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வினோத், மதுரை வடக்கு தாசில்தார் முத்து விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்