கோவில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.63 ஆயிரத்துக்கு ஏலம் போனது
கோவில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.63 ஆயிரத்துக்கு ஏலம் போனது
ஊஞ்சலூர்
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் கிளாம்பாடி அருகே பழனிகவுண்டம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியாக குண்டம் விழா கடந்த 3-ந் தேதி நடந்தது. 4-ந் தேதி பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். 5-ந் தேதி மஞ்சள் நீராட்டு நடந்தது. இந்தநிலையில் இந்த கோவிலில் அம்மன் கருவறையில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு எலுமிச்சை பழம் நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டது.
இந்த பழத்தை ஈரோடு் சூரம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ரூ.63 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.