கடையம் அருகே வாலிபர் தற்கொலை
கடையம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடையம்;
கடையம் அருகே நரையப்பபுரம் ராஜீவ் காலனி வடக்கு தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் முருகன் (வயது 27). இவருக்கும், கடையத்தை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் முடிந்து, தற்போது ஆண் குழந்தை பிறந்து 20 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் முருகன் கடந்த 15 நாட்களாக இளைப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் பலன் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் வீட்டில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.