கீழப்பாவூர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
பாவூர்சத்திரம்:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின். கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து துர்கா ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.