கார் மோதி தொழிலாளி சாவு

திசையன்விளை அருகே கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

Update: 2021-02-07 19:22 GMT
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் கருப்பன் கோனார். இவரது மகன் லட்சுணன் (வயது 35) ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் இட்டமொழியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மன்னார்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த கார் அவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலை ஓரம் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் அஜித் (23) என்பவரை னகது செய்தனர். லட்சுமணன் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்