காணாமல் போன சிறுமியை 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டனா்
உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன சிறுமியை 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டனா்
உளுந்தூர்பேட்டை
கடலூர் மாவட்டம் பெரியபரூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் மனைவி சாந்தி(வயது 27). இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டவர் கோவில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது 7 வயது மகள் இசையா வுடன் தங்கி அங்குள்ள மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சாந்தி வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த இசையா தனது தாயைத் தேடி வெளியே சென்றாள். வீட்டில் இசையாவை காணாமல் அதிர்ச்சி அடைந்த அவளது தாய் சாந்தி மற்றும் உறவினர்கள பல இடங்களில் தேடியும் இசையாவை காணவில்லை. பின்னர் இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஏட்டு அஷ்டலட்சுமி மற்றும் போலீசார் இசையாவை தேடினர். அப்போது உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இசையா தனியாக நின்று அழுதுகொண்டிருந்ததை பார்த்த போலீசார் அளவை மீட்டு தாய் சாந்தியிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன சிறுமியை 2 மணி நேரத்தில் கண்டுபிடித்து அவளது தாயிடம் ஒப்படைத்த பெண்போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.