உளுந்தூர்பேட்டையில் திருப்பதி எழுமலையான் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை

உளுந்தூர்பேட்டையில் இன்னும் 2 வாரத்தில் திருப்பதி எழுமலையான் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற இருப்பதாக குமரகுரு எம்.எல்.ஏ. தெரிவித்தார்

Update: 2021-02-07 16:47 GMT
உளுந்தூர்பேட்டை

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு தனது சொந்த செலவில் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலை அருகே சேரன் ரவுண்டானாவில் 4 ஏக்கர் நிலத்தை வாங்கி திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினார். இதற்கான ஆவணங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேரடியாகச் சென்று தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார். 

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான நில அளவையர் ஹரிநாத் நேற்று காலை உளுந்தூர்பேட்டைக்கு வந்து கோவிலுக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை அளவீடு செய்தார். தொடர்ந்து தானமாக வழங்கிய இடத்தை தேவஸ்தானம் பெற்றுக் கொண்டதற்கான ஆவணங்களை குமரகுரு எம்.எல்.ஏ.விடம் ஹரிநாத் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமரகுரு எம்.எல்.ஏ. வருகிற 18 அல்லது 22-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறும் எனவும், இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்றார்.

மேலும் செய்திகள்