தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் திருநங்கைகள் மூலம் தேன் உற்பத்தி

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் திருநங்கைகள் மூலம் தேன் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2021-02-07 15:39 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தருவைகுளம் குப்பை கிடங்கில் 20 ஏக்கர் பரப்பில் அடர் காடுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதியில் திருநங்கைகள் மூலம் தேன் உற்பத்தி செய்வதற்காக தேன் வளர்ப்பு சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இந்த சங்கத்தை சேர்ந்த திருநங்கைகள் 10 பேர், மாநகராட்சி அலுவலர்கள் 5 பேர், மதுரை வேளாண்மைக் கல்லூரியில் தேன் வளர்ப்புக்கான சிறப்பு பயிற்சி பெற்றனர். பயிற்சியின் போது சங்கம் தொடங்குவது, தேன் விற்பனை செய்வது உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த திருநங்கைகள் தேன் உற்பத்தியை தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி பொறுப்புணர்வு நிதியின் மூலம் தேன் வளர்ப்புக்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டு, கட்டமைப்புகள் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

அதன் மூலம் தேன் உற்பத்தியை தொடங்கி உள்ளனர். இதனை மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்