ஆரணி பொன்னெழில்நாதர் கோவிலில் சாமி மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
ஆரணி பொன்னெழில்நாதர் கோவிலில் சாமி மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்தது.
ஆரணி
ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மதுரபூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில் நாதர் ஜினாலயம் கோவில் உள்ளது. இங்குள்ள சாமி சிலை மீது ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் 20-ந் தேதிக்கு பிறகு 3 நாட்கள் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடக்கும்.
அதன்படி நேற்று சாமி சிலைமீது சூரியஒளி விழுந்தது. சுமார் 5 நிமிடங்கள் நீடித்தது. அப்போது பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.