ராசிபுரத்தில் மாணவியின் படத்தை வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய மின்வாரிய ஊழியர் கைது

ராசிபுரத்தில் பள்ளி மாணவியின் படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய மின்வாரிய ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-02-07 03:17 GMT
ராசிபுரம்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமாபுரத்தை சேர்ந்தவர் ரவி. மின்வாரியத்தில் பணியாற்றி வந்த இவர் மரணம் அடைந்ததையொட்டி அவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 24) என்பவருக்கு வாரிசு அடிப்படையில் வேலை கிடைத்தது. தற்போது தமிழ்ச்செல்வன் மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். 
இந்தநிலையில் தமிழ்ச்செல்வனுக்கு ராசிபுரத்தை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி ஒருவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி தமிழ்ச்செல்வன் மாணவியின் படங்களை மார்பிங் செய்து இணையதளங்களில் வெளியிடுவதாக மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

கைது

இதுகுறித்து அந்த மாணவி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து ராசிபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் தமிழ்ச்செல்வன் மீது புகார் அளித்தனர். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்