‘தினத்தந்தி' செய்தி எதிரொலி: இடையாத்திமங்கலம்-கண்டனிவயல் சாலை சீரமைப்பு

‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக இடையாத்திமங்கலம்-கண்டனிவயல் சாலை சீரமைக்கப்பட்டது.

Update: 2021-02-07 03:15 GMT
மணமேல்குடி,

மணமேல்குடியை அடுத்த இடையாத்திமங்கலம் முதல் கண்டனிவயல் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை குண்டும்-குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மேலும் அதனை சீரமைப்பதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெயர்த்து போடப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தினத்தந்தி சுட்டிகாட்டியிருந்தது. இந்த நிலையில் அந்த சாலை சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டுவரப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்