பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்குப்பதிவு
பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோகைமலை,
தோகைமலை கூடலூர் அருகே குளத்து ஆத்துவாரியில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூடலூரை சேர்ந்த முருகேசன் (வயது 50), அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரகுமார் (31), குண்ணாகவுண்டம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரகுமார் (34) ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களிடமிருந்த சீட்டு்க்கட்டுகள், பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யப்பட்டுள்ளது.