காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 குத்து விளக்கு பூஜை

காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2021-02-07 02:52 GMT
அரிமளம், 

அரிமளம் ஒன்றியம் கீழப்பனையூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 1,008 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் பங்கேற்று சுமங்கலியாக நீண்டகாலம் வாழ வேண்டியும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், புதிதாக திருமணம் நடைபெற்ற பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், நல்ல உடல்நலம், சகல செல்வமும் கிடைக்க வேண்டியும், உலகம் பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் பஞ்சபூதங்கள் சிறப்பாக அமைய வேண்டியும் வழிபாடு நடத்தினர்.

மேலும் செய்திகள்