அரவக்குறிச்சி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

அரவக்குறிச்சி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-07 02:21 GMT
அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி மலைக்கோவிலூர் அருகே சாராயம் விற்பனை நடைபெறுவதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் மலைக்கோவிலூர் பகுதியில் சோதனை நடத்தினார்கள். அப்போது மலைக்கோவிலூர் அருகே பெத்தான் கோட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா கணவாய் பட்டியைச் சேர்ந்த அய்யாவு (வயது 44) என்பவர் தனது மொபட்டில் சாராயம் வைத்துக்கொண்டு அரவக்குறிச்சி அருகே முத்துக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சங்கர் (65) என்பவருக்கு விற்றுக்கொண்டிருந்த போது போலீசார் 2 பேரையும் கைது செய்து, அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்