இந்திய மருத்துவசங்கத்தினர் உண்ணாரவிரதம்
இந்திய மருத்துவசங்கத்தினர் உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்.
ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி முறையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் மத்திய அரசு இந்த ஆணையை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று கரூர்-ஈரோடு சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதற்கு தலைவர் டாக்டர் சதீஷ் தலைமை தாங்கினார். அமராவதி மருத்துவமனை டாக்டர் வேலுச்சாமி, மனோகரன், சண்முகநாதன், ஈரோடு இந்திய மருத்துவ சங்க தலைவர் பிரசாத், செயலாளர் செந்தில்வேல் உள்பட ஏராளமானோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டனர்.