கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிவகங்கை மாவட்ட கலெக்டர்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேற்று சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை, திருவேகம்பத்து ஆரம்ப சுகாதார நிலையம், பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையம், சாலைக்கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் அப்பல்லோ மருத்துவமனை, காவேரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 4 ஆயிரத்து 585 சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி உடன் இருந்தார்.