ராயக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து பா.ம.க. பிரமுகர் பலி
ராயக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து பா.ம.க. பிரமுகர் பலி.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தூருவாசன். விவசாயி. இவரது மகன் சின்னமாது (வயது 23). என்ஜினீயரான இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு மீனா (20) என்ற மனைவியும், 4 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் சின்னமாது டிராக்டரை காளன் கொட்டாயில் உள்ள விவசாய நிலத்தில் இருந்து ஓட்டி வந்தார். அப்போது டிராக்டர் கவிழ்ந்து சின்னமாது சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.