குமரி மாவட்டத்தில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

குமரி மாவட்டத்தில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2021-02-06 23:31 GMT
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் 
குமரி மாவட்டம் தக்கலை மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜானகி, இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நெல்லை மாநகருக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மதுரை மாநகருக்கும், குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா மதுரை சரகத்திற்கும் மாற்றப்பட்டனர். நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிாிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அருண் நெல்லை மாநகருக்கும் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மதுரை தென்மண்டல ஐ.ஜி. முருகன் பிறப்பித்து உள்ளார். 

தேர்தல்
இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் கேட்ட போது தேர்தல் வருவதையொட்டி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்