தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி பிணம் போலீஸ் விசாரணை
காட்டுமன்னாா்கோவில் அருகே தூக்கில் மாணவி பிணமாக கிடந்தாா்.
காட்டுமன்னார்கோவில்,
கடலூா் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்த கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் சிவவேந்தி(வயது 17). இவர் காட்டுமன்னார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாணவி, பூவிழுந்த நல்லூரில் உள்ள ஒரு அரச மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.