பெண் எரித்துக்கொலை

சங்கராபுரம் அருகே பெண்ணை எரித்துக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2021-02-06 17:59 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே பெண்ணை எரித்துக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

எரிந்த நிலையில் பெண் பிணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மையிலாம்பாறை காட்டு பிள்ளையார்கோவில் அருகே உள்ள முட்தோப்பில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி, சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

விசாரணையில் அவர் சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி வெண்ணிலா(வயது 38) என்பதும், அவரை யாரோ மர்ம நபர்கள் எரித்துக் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. முருகேசன் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவர் இறந்த பின்னர் வெண்ணிலா கூலிவேலை செய்து தனது மகன், மகளை வளர்ந்து வந்ததும் தெரியவந்தது. 

மேலும் வெண்ணிலா எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார் என்ற விவரதும் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து வெண்ணிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெண்ணிலாவை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

தடயங்கள் சேகரிப்பு

இதற்கிடையே வெண்ணிலா கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்த தடயங்களை விழுப்புரம் வட்டார தடவியல் நிபுணர் ராஜீவ் தலைமையிலான அதிகாரிகள் சேகரித்து சென்றனர். சங்கராபுரம் அருகே பெண் எரித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்