ரூ.50 ஆயிரம் சாராயம் பறிமுதல்

நாகையில் வீட்டி்ல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் ஒருவரை கைது செய்தனர்.

Update: 2021-02-06 17:17 GMT
நாகப்பட்டினம்.

நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் புதுச்சேரி மாநில சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மதி  மனைவி வீரலட்சுமி (வயது50) என்பவர் தனது வீட்டின் பின்புறம் புதுச்சேரி மாநில சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததும், அங்கிருந்து பாக்கெட் போட்டு, சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரலட்சுமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சாராயம் மற்றும் பாக்கெட் போட பயன்படுத்திய எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்