மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

மோட்டார் சைக்கிள்களை திருடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-06 16:53 GMT
காரைக்கால், 

காரைக்கால் நித்தீஸ்வரம் குட்டக்கரை தெருவை சேர்ந்தவர் கார்த்திக். வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இவரது மோட்டார் சைக்கிள் மாயமானது. மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நகர காவல்நிலையத்தில் கார்த்திக் புகார் கொடுத்தார். 

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
இந்நிலையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் படம் மற்றும் வீடியோ ஒன்றை மர்மநபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருந்தார். 

இதை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளை திருடியது காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அம்பகரத்தூர் பகுதியை சேர்ந்த சூர்யா (20) மற்றும் 16 வயதுள்ள 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. 

மேலும் அவர்கள் குட்டக்கரை, நேருநகர் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்