28 கிலோ கஞ்சாவுடன் தந்தை, மகன் கைது

28 கிலோ கஞ்சாவுடன் தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-06 15:21 GMT
கமுதி,

கமுதி அருகே ஒச்சதேவன்கோட்டையை சேர்ந்தவர் சண்முக நாதன் (வயது 26). இவரது தந்தை வேலாயுதம் (வயது 57). இவர்கள் 2 பேரும் கொம்பூதி சாலையில் ஒச்சதேவன் கோட்டை விலக்கு சாலையில் உள்ள பாலத்தின் அருகே கருவேலமர காட்டுப் பகுதியில் விற்பனை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்துள்ளனர். அப்போது கோவிலாங்குளம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 2 பேரையும் மடக்கி பிடித்தனர். சாக்கு மூடையில் அவர்கள் வைத்திருந்த 27 கிலோ 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்