செங்கத்தில் ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து சாலை மறியல்
செங்கத்தில் ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து சாலை மறியல் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்
செங்கம் மில்லத்நகர் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில் அப்பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் சரியான முறையில் வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று திடீரென அப்பகுதியில் உள்ள பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.